பிரபல நடிகை ஒருவர் தான் இறந்துவிடுவேன் என்று தனது சொத்துக்களை சகோதரரிகளுக்கு பிரித்து கொடுத்துவிடுமாறு கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனுஷ் பட நாயகி பரூல் யாதவ். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தனுஷின் ட்ரீம்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்பு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இவர் தற்போது நம்பிக்கை இல்லாமல் உயிருக்கு போராடியதை தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.
தொடர்ந்து 12 நாட்கள் காய்ச்சல், 20 நாட்கள் சுவையின்மையால் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு வரும் இவர் மூன்றாவது மாடியில் தனது அறையில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.
குறித்த சூழ்நிலையில் இருந்து தான் மீண்டு வருவது கடினம் எனவும் இறந்துவிடுவேன் என்றும் தனது சொத்துக்களை தனது இரண்டு சகோதரரிகளுக்கு சரிசமமாக பிரித்து கொடுத்துவிடவும் அவருடைய மருத்துவருக்கு மின்னஞ்சல் செய்துள்ளார். குறித்த தகவல் தற்போது வெளியாகி பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பினை மற்றவர்கள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் தற்போது கூறியுள்ளார்.
View this post on Instagram