கொரோனா தொற்றாளரின் வீட்டுக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கிரிவுல, புஸ்கொலதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் கொரோனா நோயாளி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர் அங்கு சென்றார்.
இதன்போது, சுகாதார பரிசோதகரை தாக்க முயன்ற கொரோனா தொற்றாளரின் தந்தை, அவரது முகத்தில் எச்சில் துப்பியதுடன், சம்பவத்தின்போது வர் மது போதையில் இருந்தாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து 48 வயதான சந்தேக நபரை பொலிசார் கைது செய்ததுடன் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி அதுரகம, பண்டாரகமவில் இதே போன்ற ஒரு சம்பவம் பதிவாகிய நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.