நாட்டின் பல்வேறு அரச மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது சடுதியாக அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வைத்தியசாலைகளில் பாரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து நாடாளுமன்ற ஆலோசனை குழுக் கூட்டத்தை சுகாதார அமைச்சர் தலைமையில் நடத்தும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இந்த கோரிக்கையை அவர் முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன, இன்றைய தினத்தில் அரசாங்கம் இந்த விடயம் பற்றி பதிலளிக்கும் என கூறியுள்ளார்.