வெளிநாடுகளில் பாவனைக்கு உட்படுத்திய பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் இத்தீர்மானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள், வாகனங்கள் மற்றும் ஜவுளிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொது கட்டுப்பாட்டாளரான தமயந்தி எஸ். கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.


















