கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையும் கோவிட் நோயாளர்கள் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுவரை அந்த வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகிலும், தரையிலும் கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக விரைவில் அந்த வைத்தியசாலையும் அவசர நிலையை பிரகடனம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை,மருத்துவமனை நடைபாதையில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையங்களில் பதிவிடப்பட்டது போன்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.