தனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறி வெளியாகியுள்ள செய்திகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“விமுக்தி குமாரதுங்க அரசியலில் பிரவேசிக்கின்றார் என்ற தவறான பிரச்சாரம் இந்த நாட்களில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான அறிக்கை. நான் அதை முழுமையாக நிராகரிக்கிறேன்.
அரசியலில் பிரவேசிக்கும் ஆர்வமோ விருப்பமோ அவருக்கு இல்லை, விமுக்தி குமாரதுங் நம் நாட்டை மிகவும் நேசித்தாலும், நாட்டுக்கு சேவை செய்வதற்கான ஒரே வழி அரசியல் அல்ல என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
எனவே, இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களால் மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.