ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்க்காக தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமி அவர்களின் சகோதரியின் மரணம் நாடு திரும்பிய பின்னரே அவரது தாயார் அவருக்கு தெரிவித்துள்ளார்.இந்த விடயம் அறிந்த தனலட்சுமி விமான நிலையத்திலே கதறி அழுதுள்ளார்.
திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் இந்தியா சார்பாக கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றிருந்தார். இதற்கு முன் பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி போட்டியில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் திகதி அவரின் மூத்த சகோதரி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
ஏற்கனவே இளைய அக்காவும் இறந்துவிட, அப்பாவையும் இழந்து அம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். எனவே அக்காவின் இறப்பு விஷயம் தெரிந்தால் இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாவார் என்றும், அதனால் போட்டியில் கவனம் சிதறும் என்றும் எண்ணிய அவரின் அம்மா உஷா இந்த செய்தியை அவரிடம் இருந்து மறைத்து, அக்கா நன்றாக இருப்பதாக தன் மகள் தனலட்சுமியிடம் பேசி வந்துள்ளார்.
தொடர்ந்து ஒலிம்பிக் போட்டி முடிந்து ஊர் திரும்பிய தடகள வீராங்கனைகளான தனலட்சுமி மற்றும் சுபா ஆகியோற்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு மகிழ்வுடன் ஊர் திரும்பிய தனலட்சுமிக்கு அவரின் அக்கா இறந்த செய்தியை கூறவே, விமான நிலையத்திலே தனலட்சுமி கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.