யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த 84 வயதான பெண் ஒருவரும், மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவருமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் யாழ்.கஸ்த்துாரியார் வீதியை சேர்ந்த 30 வயதான கர்ப்பவதி பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்வடைந்துள்ளது.