காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் 68ஆவது வார்ட் அறையிலிருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று தப்பியோடியுள்ளார்.
வைத்தியசாலையில் நேற்று அன்டிஜன் பரிசோதனை செய்தபோது குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதன்பின்னர் அவர் 68ஆவது நோயாளர் அறையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து நேற்று இரவு 7.20 அளவில் குறித்த நபர் தப்பிச்சென்ற நிலையில், பொலிஸார் அவரை தேடி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


















