தன்னைப்பெற்ற தாயின் கழுத்தை வெட்டி வீசி கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த 65 வயதான தாயின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 40 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று (11) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


















