கோவிட் -19 தொற்றின் டெல்டா மாறுபாடு காட்டுத் தீ போல் பரவத் தொடங்கியுள்ளதால், பல சிறப்பு வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நாட்டை தற்காலிகமாக முடக்குவதை தீவிரமாக பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
கோவிட் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டும் போதாது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பயணத் தடைகளை விதித்த பிறகும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டை மீறியதாக மருத்துவ நிபுணர்களைக் கொண்ட பல தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதன்படி, டெல்டா மாறுபாடு பரவுவதை திறம்பட கட்டுப்படுத்த ஊரடங்கு விதிப்பதை கருத்தில் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை மருத்துவ கவுன்சில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரசு தாதிய அதிகாரிகள் சங்கம் மற்றும் வேறு சில தொழிற்சங்கங்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளன.
இதற்கிடையில், நோய் பரவுவதைத் தடுக்க தவறினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளின் திறனை பலவீனப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்,
ஏனெனில் தற்போது பெரும்பாலான வைத்தியசாலைகள் அவற்றின் அதிகபட்ச திறனை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.