சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நீங்கும் வகையில், ஒரு இலட்சம் வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு கொள்கலன்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தைகளுக்கு எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.