இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகமான, 24 ஆம் புலிகேசி படத்தில், நடிகர் வடிவேலு நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதனால், கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மெர்சல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இவர் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘டிடெக்டிவ் நேசமணி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அப்படத்தை தயாரிப்பாளர் சி.வி குமார் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும், அப்படத்திற்காக வடிவேலுவை வைத்து உருவாக்கப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியும் வந்தது.
ஆனால், போஸ்டரை பார்த்த தயாரிப்பாளர் சி.வி.குமார், இது உண்மை அல்ல, போலியானது என்று பதிவு ஒன்றை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.