தமிழகத்தில் சுவாசக்கோளாறால் மதுரை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் நேற்றையதினம் காலமானார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்தநிலையில் சுவாசக்கோளாறு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சந்திதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். இதேவேளை தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதினமும் ஒன்று ஆகும்.
இந்நிலையில் அவரது மறைவு தமிழகத்தில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா அடுத்த மதுரை ஆதீனம் தான் தான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.