இந்தியாவில் மறைந்த முன்னாள் முதல்வர் மன்மோகன் சிங் (Manmohan Singh) உடலுக்கு இன்று (28) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி இன்று காலை 8 மணிக்கு மன்மோகன் சிங்கின் உடல் அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முற்பகல் 9.30 மணி வரை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
7 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்க தினம்
இதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
அத்துடன் முழு இராணுவ மரியாதையுடன் முற்பகல் 11.45க்கு அவரது உடல் அக்கினியுடன் சங்கமிக்கும் இறுதி சடங்குகள் இடம்பெறவுள்ளன
இதேவேளை மன்மோகன சிங்கின் மறைவுக்காக எதிர்வரும் முதலாம் திகதி வரை 7 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுஸ்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய கொடி அரைக் கம்பம்
இந்த 7 நாட்களில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும், இந்தியா முழுவதிலும், வெளிநாட்டில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டு பிரதமராக பதவி வகித்தார்
இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியவர் என்ற பெருமையை மன்மோகன் சிங்கை சாரும். இதனை கட்சி பேதமின்றி அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.