பிரபல சிங்கள மொழி நடிகை நயனதாரா விக்கிரமாராச்சி கொவிட் வைரஸால் பாதிப்புற்று ஆபத்தான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இணையத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
அதில், தற்போதைய கொவிட் தொற்று நோயை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அனைத்து நாடகங்களின் படப்பிடிப்புளையும் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். “என் மூச்சு திணறியது; நான் இறக்கப் போகிறேன் என நினைத்தேன்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.