கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், வீட்டிலேயே தனிமைபப்டுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சிறுமி ஒருவர், ஆவி பிடிக்க முற்பட்டபோது வெந்நீர் உடலில் கொட்டி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஆனமடுவ பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
பத்து வயதான குறித்த சிறுமிக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் அவர்களது வீட்டிலேயே வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சிறுமிக்கு ஆவி பிடிப்பதற்காக வெந்நீர் வழங்கப்பட்டுள்ளது. சிறுமி ஆவி பிடிக்க முற்பட்டபோது அந்த வெந்நீர் உடலில் கொட்டியதால் காயம் ஏர்பட்டுள்ளது.
இந்நிலையில் உடனடியாக சிறுமி, உரிய சுகாதார வழிகாட்டல்களின் கீழ், ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியசாலையின் கொவிட் -19 சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆனமடுவ வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறினார்.