காபுலின் வழமையாக மும்முரமாக காணப்படும் வீதிகள் தொடர்ந்தும் எந்த மாற்றமும் நிகழாதது போல காட்சியளிப்பதுடன் ,மக்கள் வேகமாக பொருள்கொள்வனவில் ஈடுபடுகின்றதாக காணப்படுவதுடன் , வீதிகளில் பெண்கள் நடமாட்டமின்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு ,கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் பொருட்களை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸார் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதகவும் கூறப்படுகின்றது.
எனினும் அங்கு பெரிய மாற்றம் தென்படுகின்றதாகவும் , அதாவது வீதிகளில் ஒரு பெண்ணை கூட காணமுடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காபுலை தலிபான் கைப்பற்றியது முதல் பெண்கள் வீடுகளிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படும் அதேவேளை, தங்கள் ஆட்சியின் கீழ் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தலிபான்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தலிபானின் ஆட்சியின் கீழ் வாழ்வது குறித்து ஆப்கான் பெண்கள் அச்சமடைந்துள்ளமை தெளிவாக தெரிகின்றது. கடந்த சில நாட்களிற்கு முன்னர் காணப்பட்டது போன்று வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு பெண்கள் துணியாத நிலை காணப்படுகின்றது. அவ்வாறு வெளியே செல்பவர்கள் பாராம்ரிய ஆடைகளையே அணிகின்றனர்,அவர்கள் தங்கள் முகங்களை முழுமையாக மூடுகின்றனர்.
கடந்த தசாப்தகாலத்தில் கல்வி கற்ற தங்களிற்கு என தொழில்வாழ்க்கையை உருவாக்கிக்கொண்ட துணிச்சலான பெண்கள் பலர் இந்த தலிபானின் ஆட்சியின் கீழ் வாழும் நிலையிலிருந்து விடுபட விரும்புகின்றனர்.
இந்நிலையில் நான் எனதும் எனது புதல்விகளினதும் எதிர்காலம் குறித்து கவலையடைந்துள்ளேன், அவர்கள் என்னை கொலை செய்தால் என்ன நடக்கும் எனது பிள்ளைகள் தாயில்லாதவர்களாகிவிடுவார்கள் என பெண் ஒருவர் அவர் சிஎன்என்னிற்கு தெரிவித்தார். அத்துடன் நான் பத்துவருடங்களாக சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினனேன் அவர்கள் எவரும் எனக்கு உதவவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
காபுலின் மத்தியில் உள்ள ஆடையகம் ஒன்று- தலிபான் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் வருமானத்தை இழந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல புர்ஹாக்களை விற்பனை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
1990களில் தலிபான் ஆட்சி செய்தவேளை அது கட்டாய ஆடையாக காணப்பட்டது. எனினும் கடந்த இரண்டுதசாப்தங்களில் காபுலில் அதிகம் காணப்படாத ஆடையாக காணப்பட்டது புர்ஹா, தற்போது தலிபானின் வருகையை தொடர்ந்து அதன் விற்பனை அதிகரித்துள்ளது.
தங்கள் கடைகளின் வாடிக்கையாளர்களான ஆண்கள் அச்சமடைந்துள்ளனர் அவர்கள் தங்கள் குடும்பத்தவர்களிற்கா அதனை வாங்குகின்றனர் அதனை அணிவது மாத்திரம் வீதிகளில் பாதுகாப்பாக நடமாடுவதற்கான ஒரே வழி என அவர்கள் கருதுகின்றதாகவும் ஆடைவிற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றதாக அந்த தகவ;ல்கள் மேலும் தெரிவிக்கின்றன.