நாட்டில் தற்போது அதிகரித்து வரும் அதிகளவு கோவிட் தொற்றாளர்கள் காரணமாக களுபோவில பொது மருத்துவமனை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,குறித்த மருத்துவமனையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீறப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் வைத்தியர் ருக்ஷன் பெல்லனா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது களுபோவில பொது மருத்துவமனையின் 7 விடுதிகளில் 300 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஏழு மருத்துவர்கள் உட்பட சுமார் 30 ஊழியர்கள் ஏற்கனவே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையின் ஏனைய ஊழியர்களின் நிலைமையும் மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



















