நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தவற செய்தியை பரப்பியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கருத்தொன்றை வெளியிட்ட தேசிய ஊழியர் சங்கத்தின் பெற்றோலிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதுள்ள எரிபொருள் 11 நாட்களுக்கே போதுமானது என நேற்றைய தினம் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். அத்துடன் எரிசக்கதி அமைச்சரின் உத்தியோகபூர்வ வீட்டின் சீரமைப்புக்கு ஏற்படும் செலவு தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி மக்களை தவறாக வழிநடத்தியதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.