இரத்த சேமிப்பின் அளவு பாதுகாப்பான அளவை விடக் குறைந்துள்ளதாக இரத்த மாற்று நிலையத்தின் தலைவர் மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.
இரத்த சேமிப்பின் அளவு குறைவதால் இரத்த மாற்று நிலையம் பல வாரங்களாக ஆபத்தான நிலையில் உள்ளது.
டெல்டா கொரோனா பரவலாலும் ஊரடங்கு உத்தரவாலும் தன்னார்வ இரத்த தான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.
இரத்தத்தை ஏனைய பொருட்கள் போல் நீண்ட காலம் சேமிக்க முடியாது.
இரத்த சிவப்பணுக்களை 30 -35 நாட்களுக்கும் குருதி சிறுதட்டுகளை(Platelets) 6 நாட்களுக்குமே சேமித்து வைக்க முடியும் என மருத்துவர் எதிரிசிங்க மேலும் கூறினார்.