கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஆயுர்வேத வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சையளிக்காது அவர்களை உயிரிழக்கச் செய்வதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள், இதுத் தொடர்பில் சுகாதாரத் தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, சிசிர ஜயகொடி, சுகாதார அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களை ஆயுர்வேத வைத்தியசாலைகளில் அனுமதிக்காது உயிரிழக்க அனுமதிப்பது தண்டனைக்குறிய குற்றம் எனவும், உள்நாட்டு மருத்துவத்தினூடாக உயிரிழப்புக்களை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.