கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஊடக நிறுவனம் ஒன்றுடம் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நீண்ட காலமாக நாட்டை முடக்கி வைப்பதில் எந்த பயனும் இல்லை.
அதற்கமைய, நாட்டை திறக்கும் சந்தர்ப்பத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.