நாம் எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலும், அந்த உணவு முதலில் வயிற்றுப் பகுதியைத் தான் அடைகிறது. மேலும் ஒருவர் குண்டாகிவிட்டால், அதன் முதல் அறிகுறி வயிற்றுப் பகுதியில் தான் தெரியும்.
வெறும் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உட்கார்ந்தவாறே வேலை செய்வது மட்டும் ஒருவரது தொப்பையின் அளவைப் பெரிதாக்குவதில்லை.
உடலுழைப்பு இல்லாமல் இருக்கும் போது, தசைகளின் அடர்த்தி குறைந்து, உடலில் கலோரிகளை எரிக்கும் திறனும் குறையும்.
இதனால் தான் வயிற்றுப் பகுதியில் எளிதில் கொழுப்புக்கள் தேங்குகிறது. இந்த நிலையில் நீங்கள் குறைவாக சாப்பிட்டு, அதிகளவு உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும், உடனடி பலன் கிடைப்பதில்லை.
ஒருவரது வயிறு வீங்கி இருந்தால், அது தோற்றத்தை மோசமாக காண்பிப்பதோடு, பல்வேறு மோசமான நோய்களின் தாக்கத்தையும் அதிகரிக்கும். எனவே தொப்பையை குறைக்க வேண்டும். அதற்கு ஓர் அற்புத பானம் உண்டு.
பருகினால் ஒரே வாராத்தில் நல்ல பலனை பெற்று கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்
திராட்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
தேன் – 1 டீஸ்பூன்
ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் 1 கப் ஆரஞ்சு ஜூஸ் அல்லது திராட்சை ஜூஸ் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொண்டால், எடையைக் குறைக்க உதவும் பானம் தயார்.
எப்படி பயன்படுத்துவது?
இந்த பானத்தை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க வேண்டும்.
இதனால் ஒரே வாரத்தில் உங்கள் உடல் எடை மற்றும் தோற்றத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
ஒருவேளை இந்த பானத்தை மீண்டும் குடிக்க நினைத்தால், இரண்டு வார காலம் இடைவெளி விட்டு, பின் மீண்டும் ஒரு வாரம் தொடர்ந்து குடியுங்கள்.
குறிப்பு
ஒருவேளை இந்த பானத்தைக் குடிக்கும் போது, நீங்கள் ஏதேனும் உடல் அசௌகரியத்தை உணர்ந்தால், உடனே இந்த பானத்தைக் குடிப்பதை நிறுத்திவிடுங்கள். பின் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகிடுங்கள். இதனால் சரியான காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.