பொதுவாக மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் மாம்பழம்.
மாம்பழத்தின் வேர் முதல் இலை வரை அனைத்தும் மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில், மாம்பழத்தை போல் மா இலையிலும் ஆரோக்கியமான பலன்கள் அதிகமாக இருக்கும். பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள மா இலைகள் குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகின்றது.
மேலும், உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற கொடுமையான நோய்களைத் தடுக்க உதவியாக இருக்கின்றது.
சமீபத்திய ஆய்வில், மா இலைச் சாற்றில் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி உயிரியலை குறைக்கும் ஆற்றல் உள்ளது என்றும் இது அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து மா இலை சாப்பிடும் ஒருவருக்கு செரிமான ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சினையும் வராது என சொல்லப்படுகின்றது.
இப்படி ஏகப்பட்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் மா இலையில் வேறு என்னென்ன மருத்துவ பலன்கள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மா இலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
1. மா இலைகளில் இருக்கும் ஊட்டசத்துக்கள் வயிற்று பிரச்சினையை குறைக்க உதவும். இதனால் ஆய்வு வேத சிகிச்சையில் அதிகமாக மா இலைகள் பயன்படுத்தப்படுகின்றது
. 2. மா இலைகளை உட்கொள்வது ஒருவருக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். ஏனெனின் இலைகளில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் மற்றும் அந்தோசயனிடின்கள் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுகின்றது. அத்துடன் மா இலையில் பல சேர்மங்கள் உள்ளன. அவை இன்சுலினுடன் சேர்ந்து, உடலில் கிளைகோஜனின் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
3. மா இலைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மா இலையில் இருக்கும் பாலிபினால்களான கேலோட்டானின், பினாலிக் அமிலம் மற்றும் குவெர்செடின் ஆகியன புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றது.
4. சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திலும் மா இலை தாக்கம் செலுத்துகின்றது. இது வயது முதிர்ந்த அறிகுறிகளை குறைத்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது.