நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 6ம் திகதியுடன் நீக்குவதா? நீடிப்பதா? என்பது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனே முடிவு எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரப் பிரிவினருடன் இது தொடர்பில் இந்த வாரம் கலந்துரையாடப்படும் எனவும், அதன்பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும்தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
14ஆம் திகதிவரை ஊரடங்கு நீடிக்குமா? இன்று அரசாங்கம் அளித்த பதில்
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவிக்கின்றது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று காலை நடந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளரான பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்தார்.
அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை 14ஆம் திகதிவரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், அதுதொடர்பில் நேற்று நடந்த அமைச்சரவை சந்திப்பில் இதுபற்றி பேசப்பட இல்லை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.