பாரதி கண்ணம்மா சீரியல் மக்களின் பெரிய ஆதரவை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் சீரியலுக்கான ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாக சீரியல் எந்த ஒரு சண்டை, பிரச்சனையும் இல்லாமல் மிகவும் அழகாக சென்றது, ஆனால் அதற்குள் ஒரு சண்டையை வைத்துவிட்டார் இயக்குனர்.
பாரதி-கண்ணம்மா இடையே லட்சுமியை வைத்து இப்போது சண்டை வெடித்துள்ளது, அடுத்து என்ன நமக்குமோ தெரியவில்லை.
இந்த நிலையில் தான் சீரியலில் அகிலன் வேடத்தில் நடித்தவர் ஆள் மாற்றம் நடந்துள்ளது. அவருக்கு பதிலாக புதிய அகிலனாக ஒருவர் நடிக்க வந்துள்ளார்.
அவருடன் சீரியலில் பாரதி வேடத்தில் நடிக்கும் அருண் புகைப்படம் எடுத்துள்ளார். அது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் வலம் வருகிறது.




















