கொலம்பியாவில் ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட “மு” எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸானது “மு” அறிவியல் ரீதியாக பி.1.621என அறியப்படுகிறது, உலக சுகாதார ஸ்தாபனம் இந்த மாறுபாடு தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பின் அபாயத்தைக் குறிக்கும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என கூறியது.
மேலும் இந்த வைரஸை நன்கு புரிந்துகொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது. தொற்று விகிதங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் புதிய வைரஸ் பிறழ்வுகள் தோன்றுவதில் அதிகளவான கவலை உள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
தற்போது நான்கு கொவிட் -19 வகைகளை உலக சுகாதார ஸ்தாபனம் அடையாளம் கண்டுள்ளது, இதில் 193 நாடுகளில் பரவியுள்ள ஆல்பா மற்றும் 170 நாடுகளில் பரவியுள்ள டெல்டா வகைகளும் அடங்கும் என்ரும் மு தற்சமயம் கொரோனாவின் ஐந்தாவது வகையாக கணிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



















