நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு விதிப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாளாந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 5,000 ஆக கண்டறியப்பட்டாலும், சமூகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50,000 நபர்கள் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதோடு டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வைரஸ் தொற்றுகளின் அளவை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.