அரிசி மற்றும் சீனியின் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை முதல் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைக் கூறியிருந்தார்.