பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் இளம் ஜோடியொன்று தகாத முறையில் இருந்த வீடியோ தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த வீடியோவில் உள்ள ஜோடியை அடையாளம் காணும் பணி இடம்பெறுவதுடன், அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர்.
வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, இளம் ஜோடியொன்று தகாத முறையில் இருந்த காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடக இணையதளம் மூலம் ஒரு பெண் இந்த தகாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளதாக சி.ஐ.டியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அங்குச் சென்றிருந்த காதல் ஜோடியொன்று தகாத முறை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது அக்காட்சிகள் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள குறித்த வீடியோ தியாக பரவியுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.