சீனி நெருக்கடிக்கு தீர்வாக இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
கரும்பு உற்பத்தி செய்யும் கிராமங்களை அமைக்கவும் கரும்புப் பானி உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கரும்பு பயிரிடக்கூடிய பகுதிகளை ஆராயுமாறு கரும்பு ஆராய்ச்சி நிறுவனத் தலைவரிடம் தெரிவித்ததாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காலி, மாத்தறை, புத்தளம், கிளிநொச்சி மற்றும் பதுளை மாவட்டங்களில் கரும்பு உற்பத்தி விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.