தடுப்பூசிகளினால் கட்டுப்படுத்த முடியாத கோவிட் திரிபுகள் உருவாகக் கூடும் என கொழும்பு மருத்துவ பீடத்தின் ஔடதங்கள் குறித்த பேராசிரியர் டொக்டர் பிரியதசர்னி கலப்பத்தி தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்று திரிபடைந்து கொண்டே சென்று ஓர் நாளில் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத ஓர் திரிபு உருவாகக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் திரிபுகளின் மாற்றத்தினால் நோய் அறிகுறிகளும் மாற்றமடையக் கூடும் என என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தென் ஆபிரிக்க கோவிட் திரிபின் பரவுகை அதிகரிக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அல்பா திரிபின் போது தடிமனுக்கான நோய் குறிகள் அதிகளவில் தென்படாத போதிலும், புதிய திரிபுகளில் காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மணமின்மை உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்படுவதாக பேராசிரியர் பிரியதர்சனி கலப்பத்தி தெரிவித்துள்ளார்.