தாய், தந்தை, பாட்டி, தங்கை ஆகியோரை துடிதுடிக்க கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
அம்மாநிலத்தின் ரோகித் நகரில் வசித்து வந்தவர் பிரதீப் மாலிக்(45). இவரது மனைவி சந்தோஷ் பப்லி(40). மகள் நேகா(19). தாயார் ரோஷ்ணிதேவி இவரது மகன் அபிஷேக் மாலிக்(20).
மகனுக்கும் பிரதீப் மாலிக்கிற்கும் தொழில்ரீதியாக ஏற்பட்ட தகராறு காரணமாக அபிஷாக் குமார் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக வசித்து வந்திருக்கிறார் . இந்நிலையில் கடந்த 27ம் தேதி அன்று வீட்டிற்கு வந்த அவர் தனது தந்தையிடம் தகராறு செய்திருக்கிறார். தகராறின் போது எழுந்த ஆத்திரத்தில் தந்தை என்றும் பாராமல் அவர் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்.
தந்தை துடிதுடித்து இருந்திருக்கிறார். இதை பார்த்து பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த தாய், பாட்டி ,தங்கை ஆகியோரை துப்பாக்கியால் சுட தாயும், பாட்டியும் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்கள். தங்கை நேகா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்திருக்கிறார். இதைன்பின்னர் அபிஷேக் மாலிக் தப்பி ஓடியிருக்கிறார்.
அக்கம்பக்கத்தினர் சத்தத்தை வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் வந்து பார்த்தபோது நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்கள். அதில் நேகா மட்டும் உயிருடன் இருப்பதை அறிந்து போலீசார் அவரை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரண்டு நாளில் நேகாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
இந்த கொலைவழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இரண்டு டிஎஸ்பிக்கள் கொண்ட அந்த தனிப்படை விசாரணையில் அபிஷேக் உயிருடன் இருப்பதை தெரிந்து கொண்டு அவரை அழைத்து விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவம் தனக்கு தெரியாது என்றும் தான் தனியாக வசித்து வருவதாகவும், எப்படி நடந்தது என்றும் சொல்லி அழுதிருக்கிறார்.
பிரதீப் மாலிக் வீட்டைச் சுற்றி இருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து ஆய்வு செய்தபோது அபிஷேக் மாலிக் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதன் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை அபிஷேக் மாலிக்கினை கைது செய்தனர் அவரிடம் நடத்திய அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியபோது அவர் சொன்னதைக் கேட்டு போலீசார் அதிர்ந்து போய் இருக்கின்றார்கள்.
தாய் ,தந்தை, தங்கை, பாட்டியை தானே சுட்டுக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். தந்தைக்கும் தனக்கும் ஏற்பட்டதில் பிரச்சினையாய் வெளியில் தங்கியிருந்து படித்து வருவதாகவும் அதில் ஏற்பட்ட பிரச்சினையால் தான் குடும்பத்தினரை சுட்டுக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆனால் குடும்பத்தையே சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கு இதுதான் காரணமா? வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று அபிஷேக் மாலிக்கிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.
கல்லூரி மாணவர் ஒருவர் குடும்பத்தையே சுட்டு கொலை செய்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



















