காலியில் இரு இளம் தாய்மார்கள் தமது வீடுகளில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் நிமோனியாவால் உயிரிழந்தமை தெரியவந்தது.
கொரோனா தடுப்பூசி எதுவும் பெறாத மூன்று பிள்ளைகளின் தாய் மற்றும் இரு குழந்தைகளின் தாய் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த இருவரும் யக்கலமுல்லவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.