யாழ்.தென்மராட்சி வரணி இயற்றாலைப் பகுதியில் வசிக்கும் 80 வயது மூதாட்டி ஒருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதியுற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென மரணமடைந்துள்ளார்.
குறித்த மூதாட்டியின் மாதிரிகள் எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழில் கடந்த 24 மணித்தியாலத்தில் 06 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர்.