பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ நசாரியோ(Ronaldo Nazario) விடுமுறையை கழிக்க இலங்கைக்கு குடும்பத்தோடு சுற்றுலா வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் (Ronaldo Nazario) உடவளவ தேசிய பூங்காவிற்கு சென்று சவாரியில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அத்தோடு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையும் ரொனால்டோ (Ronaldo Nazario) இலங்கைக்கு வருகை தந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தது.
அதில், “பிரேசிலின் முன்னாள் தொழில்முறை கால்பந்து வீரர் (Ronaldo Nazario) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடன் ஒரு வசதியான பயணத்தில் இணைந்துகொண்டார்” என விமான சேவை தெரிவித்துள்ளது.
R9 என அன்புடன் அழைக்கப்படும் ரொனால்டோ (Ronaldo Nazario)சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மேலும் மூன்று FIFA விருதுகள் மற்றும் இரண்டு Ballon d’Or பட்டங்களையும் ரொனால்டோ நசாரியோ (Ronaldo Nazario) பெற்றுள்ளார்.