தெற்கு கடற்பகுதியில் 7 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று காலை குறித்த ஏழு சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.
இதன்போது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் போதைப்பொருட்களையும், கைதான நபர்களையும் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதுடன், கப்பலின் எடை மற்றும் மதிப்பு கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் கடற்படை ஊடக பேச்சாளர் கூறினார்.



















