தற்போது நாட்டுக்கு தேவையானது அவசரகால நிலை அல்ல. உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசரமே ஆகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அவசரகால நிலை தேவையில்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,அதற்காகவே நுகர்வோர் அதிகார சபைச்சட்டம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், அரசாங்கம் அவற்றை அமுல்படுத்தாது உற்ற நண்பர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறது.
மக்கள் அத்தகைய ஒரு ஆட்சியை விரும்பவில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், ஊடகங்களுக்கு விஷேட அறிக்கையை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியானது அவசரகால விதிமுறைகளை கடுமையாக எதிர்க்கின்றது என்றும், மக்களின் ஜனநாயகத்தின் மீது இத்தகைய தாக்குதலை ஆட்சேபிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.