இலங்கையில் நாளுக்கு நாள் கொவிட் மாறுபாடு அடையாளம் காணப்படுவதால், கர்ப்பமடைவதனை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு விசேட வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதார பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொவிட் வைரஸ் தொடர்ந்து மருத்துவ துறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.
கொவிட் தொற்று புதிய நோயாகும். உண்மையாகவே கொவிட் குறித்து எங்களுக்கு தெரியாது. நாளுக்கு நாள் புதிய மாறுபாடு உருவாகுகின்றது. வைரஸ்களில் உள்ள அறிகுறிகளே உள்ளது.
நாங்கள் முன்பு கூறியதனை தான் தற்போதும் கூறுகின்றோம். கொவிட் தொற்றினால் பெரிய பாதிப்புகள் இல்லை. எனினும் டெல்டா தொற்றினால் ஆபத்துக்கள் அதிகம். நீங்கள் திருமணம் செய்து குழந்தை ஒன்றுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். அப்படியிருந்தால் யோசித்து ஒரு வருடம் அதனை தாமதப்படுத்துங்கள்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாமதப்படுத்துங்கள். ஒரு வருடம் என்பது மருத்துவ விஞ்ஞானத்தில் மிகப்பெரிய காலமாகும். அதன் போது நாங்கள் அதன் பிரச்சினைகள் குறித்து அறிந்திருப்போம். அதேபோன்று தடுப்பூசிகள் குறித்தும் எங்களுக்கு தெரியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.