வவுனியாவில் கோவிட் அச்சம் காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்காக அதிகமான மக்கள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று பரவலடைந்துள்ள நிலையில் நாடாளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றது.
இந்நிலையில் நகரப்புறங்களில் அதிகமான பொதுமக்களிற்கு காய்ச்சல், தடிமன் போன்ற உபாதைகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தனியார் வைத்தியசாலைகளிற்கு சென்று சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றால் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில் தனியார் வைத்தியசாலைகளிற்கு சென்று தமக்கான சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர்.