சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய இடங்களில் இயல்பான வானிலை நிலவும்.
அதேநேரம் வட மத்திய மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.