இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ள நிலையில் வைத்தியர் ஒருவர் தங்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதும் வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். “வைத்தியர்கள், தாதிகள் உட்பட சுகாதார பணியாளர்கள் 5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை.
அப்பா வீட்டிற்கு வர மாட்டீர்களா என பிள்ளைகள் தொலைபேசி ஊடாக கேட்கின்றார். அப்போது எங்களுக்கு ஏற்படும் வேதனைகளை வார்த்தைகளினால் கூறி விட முடியாது. இவ்வாறான சூழ்நிலைகளை புரிந்து மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என கும்பிட்டு கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ். சிங்கள புத்தாண்டின் போதே இறுதியாக வீடுகளுக்கு சென்றோம். எங்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். எனினும் வீடுகளுக்கு சென்று பார்க்க முடியாத நிலைமையிலேயே உள்ளோம்.
மேலும் அம்மா அப்பாவை பார்ப்பதற்கு கடந்த 6 மாதங்களாக செல்லவில்லை. உண்மையாகவே தற்போது எங்களுக்கும் மிகவும் சோர்வாக உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.