கோவிட் தடுப்பூசி தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவிட் தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக சிலர் கூறுவது ஆதாரமற்றது என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன் தவறான தடுப்பூசியை எடுப்பதாக பொது மக்களை அவர்கள் வலியுறுத்துவதாகவும் சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் வழங்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் அனுமதி அளித்துள்ளன.
அவற்றை இலேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.