ஐக்கிய மக்கள் சக்தியின் ”எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் நாடுமுழு நடைமுறைப்படுத்தும் “ஜன சுவய” கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டத்தின் 26 ஆவது கட்டமாக 35 இலட்சம் பெறுமதியான அத்தியவசிய வைத்தியசாலை உபகரணங்கள் திஸ்ஸமகாராம ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளார்.
இந்த விடயத்தினை எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலும் குறிப்பிடுகையில்,
இன்றைய தினம் குறித்த உபகரணங்களை திஸ்ஸமகாராம ஆதார வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுனர் பிரஹான் வீரசிரிவிடம் FUJI COMPUTED RADIOGRAPHY SYSTEM உபகரணம் உள்ளடங்களாக Image Plate and Cassete கருவி ஒன்றும், PRIME T 2 Image Digitizer கருவி ஒன்றும், FCR Prima Console கருவி ஒன்றும்,DRYPIX IMEGER ஒன்றுமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
ஹம்பந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதா ஆராய்ச்சி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் சகலரினதும் வேண்டுகோளின் பிரகாரம் சஜித் பிரேமதாஸ அவர்களின் தலைமையில் இது வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இதற்கு முன்னர் 25 கட்டங்களில் 749 இலட்சம் (74,994,000) ரூபா பெருமதியான வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்தது.