ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இந்நாட்டுக்கு கடத்திச் வந்த வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இச் சுற்றிவளைப்பானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தெற்கு கடலில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கப்பலில் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கப்பல் மற்றும் ஹெரோயின் தொகை இலங்கை கடற்பரப்புக்கு கடற்படையால் கொண்டு வரப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.