கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள், தங்களின் வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டுமெனும் கோரிக்கையை முன்வைத்து நேற்று (2024.12.12) மாலை 6.30 மணியளிவில் தீப்பந்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
வளாகத்தின் ஒரு பக்க வாயிலில் ஆரம்பித்த இப் போராட்ட பேரணி கோஷங்களை எழுப்பிய வண்ணம் சுமார் 600M தூரம் மாணவர்கள் பதாதைகளை ஏந்திக்கொண்டு நடந்து வந்து, பிரதான நுழைவைாயிலுக்கு முன்னால் நின்று கவனயீர்ப்பு போராட்டாத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் போது கலந்து கொண்ட மாணவர்கள், திருகோணமலை வளாகத்தை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த கோரியும், வளாகத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நீக்க கோரியும், மகாபொல கொடுப்பனவு தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருகோணமலை வளாகத்தை தனி பல்லைக்கழகமாக்குவதற்கான கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டுவந்த நிலையில், இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் 300க்கு அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தங்களுடைய கோரிக்கைகளுக்கு குரல்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்