வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது. அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூடி வழிபடலாம்.
வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேரைத் தேர்ந்தெடுத்து சாஸ்திர முறைப்படி மஞ்சள் காப்பு கட்டி, மந்திரம் கூறி, எடுத்து வடித்த விநாயகர் திருவுருவத்துக்கு சக்தி அதிகம்.
சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது. கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது. அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூடி வழிபடலாம். அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைப் பொருள்களைச் சாத்தலாம்.
வெள்ளெருக்கு விநாயகர் எழுந்தருளிய வீட்டில் செல்வம் பெருகும். பீடைகள் அகலும். மகிழ்ச்சியுடன் மன அமைதியும் உண்டாகும்.