அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தான் பதவி விலக போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
காலி மாவட்டம் பெந்தர தொகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் தன்னால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெந்தர தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஆளும் கட்சி அமைச்சர்கள் அடங்கிய கூட்டத்தின்போது யோசனை முன்வைக்கபட்டதாகவும் ஆனால் அபிவிருத்தி திட்டங்களில் இருந்து அது நீக்கப்பட்டு உள்ளதாகவும் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இந்நிலை தொடருமானால் பதவி விலகுவதாகவும் கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.