முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்துடன் சுவரொட்டியை பார்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதற்றமடைந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மிரிஹானா இல்லத்திலிருந்து கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது சுவரில் ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டியை அவதானித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் போது, இதனை அவதானித்த ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள உள்ளன. அதில் 75 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய பிறந்த திகதி கூட எனக்கு தெரியாது” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அதற்கு பதிலளித்த பிரதமர் “இல்லை, இல்லை, பிறந்தநாள் கொண்டாட முடியாது. ரணில் இன்னும் 75 வயதாகவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 75 வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கொழும்பு முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரை பார்த்தே ஜனாதிபதி குழப்பமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சுவரொட்டிகள் இன்றும் பலரின் கவனத்தை ஈர்ப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.